Who are the actors in Oru Naal Mudhalvan? |
#தெரிஞ்சிக்கோங்க
முதல்வன் படம் பாக்காத ஆளே இருக்க முடியாது. அப்படி பாக்கலைன்னாலும் atleast "முதல்வனே முதல்வனே" பாட்டு கேட்டு இருப்பீங்க. பாத்து இருப்பீங்க.
ஆனா இந்த பாட்டுல எத்தனை பாம்பு வருதுன்னு கேட்டா கரெக்ட்டா சொல்ல முடியாது. 3 சொல்ல முடியும். வடிவேல், மணிவண்ணன், ரகுவரன்னு. ஆனா பாட்டுல மொத்தம் 5 பாம்பு வரும்.
அந்த பாட்டோட concept, details பாத்திடலாம் இப்போ
ஹீரோக்கு எப்போ call பண்ணினாலும் அவர் வேலையில இருக்காருன்னு தான் வடிவேல் இல்ல மணிவண்ணன் தான் பதில் சொல்லுவாங்க. இதனால கடுப்பான ஹீரோயின் கனவு உலகத்துலயாவது ஒன்னா இருப்போம்ன்னு கனவு பாட்டுக்கு போறாங்க.
ஆனால் அங்கேயும் நாயகன் முதல்வனாகவே எந்நேரமும் files ல sign போட்டுட்டே இருக்காரு.
இங்காவது உன்னுடைய முதல்வர் வேலையை விட்டு என்னையும் கொஞ்சம் பாருன்னு அவனை இழுத்து கொண்டு பாடல் பாடி ஆடும் போது நிஜ உலக தொல்லைகள் இங்கேயும் பாம்பாக, நாயகனை நெருங்கவிடாமல் பின்தொடர்கிறது
நாயகியை, முதல்வரான நாயகனிடம் நெருங்கவிடாமல் தடுப்பது மொத்தம் ஐந்து பேர். எப்போது கால் செய்தாலும் போனை எடுத்து பேசும் மணிவண்ணன் மற்றும் வடிவேல். அரசியலில் அவனுக்கு தொல்லை கொடுக்கும் அரங்கநாதனான ரகுவரன் மற்றும் அவரது அல்லக்கை கொச்சின் ஹனிஃபா.
அந்த ஐந்தாவது ஆளை பற்றி கடைசியில பார்க்கலாம்.
முதல் பாம்பு : அரங்கநாதன் (எ ) ரகுவரன்
நாயகனும் நாயகியும் கசகசா பண்ணிட்டு இருக்கும் போது, ரகுவரன் பாம்பு அவர்களை அழிக்க வரும். அப்போது நாயகி, அருகில் இருக்கும் விளக்கை பாம்பின் மீது சாய்க்க,தீப்பற்றி பாம்பு எரிந்து சாம்பலாகிவிடுகிறது.ஆக ரகுவரன் பாம்பு முதல் பலியாகிறது.
இரண்டாவது பாம்பு : கொச்சின் ஹனிஃபா
ரகுவரன் கூடவே இருந்த அனைத்து அக்கிரமங்களுக்கும் துணையாய் நின்று தொல்லை கொடுத்த ஹனிஃபா பாம்பை நாயகி தொட்டவுடன் வான வேடிக்கையாய் விண்ணில் வெடித்து சிதறிவிடுகிறார் ஹனிஃபா.
மூன்றாவது பாம்பு : மணிவண்ணன்
அரசாங்க தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த புகழேந்தியை (அர்ஜுன்) பேசி பேசியே அரசியலுக்கு கொண்டுவந்துவிடுவார் மணிவண்ணன்.அதனால் அவர் மீது தண்ணீர் குடத்தை போட்டு மூடிவிடுவார் நாயகி. ஆனால் அப்போதும் பேசிய வாய் சும்மாயில்லாமல் முதல்வா என்றே கோஷமிடும்.
நான்காவது பாம்பு : பலவேஷம் (எ) வடிவேல்
நாயகனுடன் ஆரம்பத்தில் இருந்தே கூடவே பயணிக்கும் கேரக்டர்.
தேன்மொழியை(நாயகி) முதலில் சந்தித்ததில் இருந்து, அவர்களின் காதலுக்கு சப்போர்ட்டாகவும் இருந்தார் பலவேஷம். எனவே தான் பாடல் காட்சிகளில் ஊஞ்சலாகவும், படியாகவும் நாயகன்,நாயகிக்கு உறுதுணையாய் இருப்பது போல் பாடல் காட்சிகள் இருக்கும்.
அதே போல் இடுப்பில் தொட்டால் கூச்சசுபாவத்தில் கத்தும் பழக்கத்தை கொண்டவர் பலவேஷம். இதை அப்படியே பாடல் காட்சியிலும் வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். நாயகி, வடிவேலு பாம்பின் மேல் தொட கூச்சத்தில் நகர்ந்து செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
என்ன இருந்தாலும், இவரும் ஒரு தொல்லை தானே, அதனால் தான் கண்ணாடி குடுவைக்குள் நாயகி இவரை போட்டுவிடுவார். முதல்வனுடன் நெருங்கவிடாமல் இருந்த ஐந்தில் நான்கு பேர் கிளோஸ்.
யாருடா அந்த அஞ்சாவது ஆளு ??
வேறு யாரும் இல்ல.கவெர்மென்ட் வேலைல இருக்குற மாப்பிளைக்கு தான் கட்டிக்கொடுப்பேன் என்று விடாபுடியாக இருக்கும் நாயகியின் அப்பா விஜயகுமார் தான் அந்த அஞ்சாவது பாம்பு.
ஐந்தாவது பாம்பு : தேன்மொழியின் அப்பா விஜயகுமார்
மற்ற நான்கு பாம்புகளின் கதையை முடித்து விட்டு முதல்வனுடன் கைகோர்த்து படை வீரர்களுடன் பவனி வரும் போது, பீரங்கியின் ஓட்டையில் இருந்து வெளி வரும் விஜயகுமார் நல்ல பாம்பு,
நாயகன் மற்றும் நாயகியின் முன் படமெடுக்கும் விஜயகுமார் நல்ல பாம்பு. படமெடுக்கும் போது கழுத்தில் Govt Job என்று எழுதிருக்கும் பாருங்கள்.
அரசியல் வேண்டாம்னு படிச்சு படிச்சு சொன்னேன்,கவர்ன்மெண்ட் உத்தியோகம் வேணும்னு சொன்னேன் கேட்டியா ?? கேக்காம என் பொண்ண கூட்டிட்டு போறியா என்பது போல் படமெடுக்கும்.
மத்த பாம்புகளை முடிச்சாச்சு, இது அப்பா ஆச்சே,அப்பா மீது பயமும் மரியாதையும் இருப்பதால் நாயகி எதுவும் செய்யமுடியாமல் விழிபிதுங்கி நிற்க, அப்பா பாம்பு, முதல்வனான நாயகனை விழுங்கிவிடும்.
ஆக படத்துல மொத்தம் 5 பாம்பு இருக்கு. எத்தனை பேருக்கு இது முன்னமே தெரியும்???